காதல் - தேவை இல்லா பந்தம்
என்றிருந்தேன்..,
பேச மறுத்தேன்
காதலை மறைத்தேன்
மறைந்தது காதல் அல்ல என் உலகம் தான்..,
புரிந்தது இன்று,
கடலலைக்கும் கரைக்கும் நடுவே,
பூவுக்கும் வண்டுக்கும் நடுவே,
மண்ணுக்கும் மழைக்கும் நடுவே,
மேகத்திற்கும் மலைக்கும் நடுவே,
உண்மையான காதல் உண்டு என்று..,
சொல்லாத காதல்,
காணாத கனவு,
தூங்காத கண்கள்,
என்றுமே அழகு தான்..,
வற்றா நதிகள் போல் உன் நினைவுகளுடன் நானும்,
முற்றுபுள்ளி இல்லாத என் கவிதைகளும்,
என்றும் உனக்காக...,
No comments:
Post a Comment